இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1234 ஆக உயர்வு ! மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

0

இந்தோனேசியாவின் சுலவேசி தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால், 1234 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு அரசு. முன்னர் பலி எண்ணிக்கை 844 என்று கூறப்பட்டு இருந்தது. தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது பலரை அதிர்ச்சிடையச் செய்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மகசார், கலிமந்தன் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. சுமார் 25 லட்சம்பேர் இதனை உணர்ந்துள்ளனர். உலகிலேயே நில நடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக இந்தோனேசிய தீவுகள் உள்ளன. 2004-ல் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 1.68 லட்சம் இந்தோனேசியர்கள் உள்பட மொத்ம் 2.2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.