இயந்திரங்கள் கடத்திய வழக்கு ஹிஸ்புல்லாஹ் மற்றும் மகனுக்கு விசாரணை!

0

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகியோரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் எதிர்வரும் 9ம் திகதி காலை முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு வழக்கின் இரண்டாவது தவணை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி என உத்தரவிடப்பட்டது.

அத்துடன் சந்தேக நபர்கள் நால்வரையும் எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.