இளம்பெண்னை மரத்தில் கட்டி வெளுத்த ஊர் மக்கள் ! நடந்தது என்ன ? கொடூர மனிதர்கள்

0

வேறு சாதியை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்ததால், இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து ஊர் மக்கள் அனைவரும் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நவடா மாவட்டம் ராஜவுளி என்கிற கிராமத்தில் வசித்து வந்த ஒரு இளம்பெண், பக்கத்து கிராமத்தில் உள்ள வேறு சாதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்துள்ளார். இந்த விவகாரம் அவரின் பெற்றோருக்கு தெரியவர அவரை வீட்டு சிறையினுள் வைத்ததாக தெரிகிறது.

ஆனால், அந்த இளைஞரை மறக்க முடியாத அப்பெண், கடந்த 30ம் தேதி கிராமத்தில் மின்சாரம் இல்லாத சமயத்தில் வீட்டை விட்டு ஓடி அந்த இளைஞருடன் திருமணமும் செய்து கொண்டார். அவரை தேடி அலைந்த பெற்றோர் இருவரையும் பிடித்துவிட்டனர்.

அதன்பின், அப்பெண்ணை கிராமத்திற்கு இழுத்து வந்தனர். அதற்குள் ஊர் பெரியவர் சேர்ந்து பஞ்சாயத்து கூட, அப்பெண்ணை கட்டி வைத்து அடிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் படி, அப்பெண்ணை கட்டி வைத்து ஊர் மக்கள் அனைவரும் அடித்துள்ளனர். இதில் கொடுமை என்னவெனில், முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவரின் பெற்றோரும் இதை வேடிக்கைப் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை எடுத்து ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.