முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி ஏற்ற பின்னர், அவருக்கு துணை இராணுவக் குழுவான டக்ளஸ் தேவானந்தா ஆதரவு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஈழம் நியூஸ் வெளியிட்ட செய்தி ஒன்றை பகிர்ந்துள்ள முகப்புத்தகத்தில் ஈபிடிபி ஒட்டுக்குழு உறுப்பினர்கள் மிரட்டல் தொனியில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
கொலை அச்சுறுத்தல் பாணியில் விடுவிக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், ஒட்டுக்குழு தமது வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளமையை காட்டுகின்றது. இன்னும் டக்ளஸ் தேவானந்தா எதிர்பார்த்துள்ள அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதற்கு முன்பாகவே ஒட்டுக்குழு தமது வேலையை தொடங்கியுள்ளது என்றால், இவர்களின் கையில் அமைச்சு அதிகாரம் கிடைத்தால் என்ன அநியாயங்களை எல்லாம் செய்து மண்ணை சீரழிப்பார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.