உரிய தீர்வை அரசு உடன் தராவிடின் பட்ஜெட்டை எதிர்க்கவேண்டி வரும் ! வாயால் வடை சுடும் மாவை

0

இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவை தீர்க்கப்படாவிட்டால் அரசுக்குத் தொடர்ந்தும்ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். அத்துடன் பட்ஜெட்டையும் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டி ஏற்படலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா.நாளை மறுதினம் ஜனாதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் தீர்க்கமான முடிவுகளைக் கூட்டமைப்பு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐனாதிபதியின் உத்தியோகபூர்வப் பணி நடமாடும் சேவையின் பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நிகழ்வு பருத்தித்துறை வட இந்து மகளீர் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவ ர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது:

“சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எங்கள் கட்சி ஐனாதிபதியைச் சந்தித்துப் பேசியிருக்கின்றது. அதன்போது நீதி கோரி நிற்கும் கைதிகளைப் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரியுள்ளது.

கைதிகள் விடுதலை தொடர்பில் நாங்கள் கோரிக்கை விடுத்து உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். கை தி கள் முன்னெடு த் து வரும் போராட்டத்தை நிறுத்துமாறு பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களும் கேட்டிருந்த நிலையில் நாமும் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தோம். இதன் போது மனம் விட்டுக் கலந்துரையாடி போராட்டத்தை ஒத்திவைக்கத் தாம் இணங்குகின்றனர் என எம்மிடம் அவர்கள் கூறியிருந்தனர்.

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டுமென்றும் கைதிகள் எம்மிடம் கேட்டிருந்தனர். நாம் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்கவேண்டுமென்று இங்கு பலரும் கூக்குரல் கொடுக்கின்றார்கள். ஆனால் இவர்கள் சொல்வதற்கு முன்னரே இந்த அரசுக்கு நாங்கள் தொடர்ச்சியாக ஆதரவளிக்க வேண்டுமா இல்லையா என்பதைச் சென்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கூட நாம் ஆராய்ந்திருக்கின்றோம்.

இது தனியே கைதிகள் விடயப் பிரச்சினை மட்டுமல்ல. நிலப் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டோர் பிரச் சினை, இனப்பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டியிருக்கின்றது. நாம் ஐனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியதை சிறையிலுள்ளவர்களுக்குச் சொன்னோம்.

அத்தோடு எதிர்வரும் 17 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் உள்ளது. அதற்கு நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம். அங்கே திட்டவட்டமான தீர்மானத்தைக் கைதிகள் சார்பிலும் எடுப்போம் என்று தெரிவித்தோம். தீர்க்கமான முடிவை எடுக்க உள்ளதாகநாம் கூறிய நம்பிக்கையின் நிமித்தம் தான் போராட்டத்தை ஒத்திவைப்பதாகக் கைதிகள் சொல்லியிருக்கின்றார்கள். நாங்களும் அதற்கு உடன்பட்டுள்ளோம்.”

Leave A Reply

Your email address will not be published.