உலக அரங்கில் இந்திய தேசிய கொடியை ஏந்திச் செல்லும் தமிழன் !

0
மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாவது பாரா ஒலிம்பிக் போட்டி வருகிற அக்டோபர் 6 முதல் 13 வரை நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, நம் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரரான மாரியப்பனுக்கு கிடைத்துள்ளது.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளில் தமிழர்கள் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் தடகள வீரர் மாரியப்பன் நம் தேசிய கொடியை ஏந்திச் செல்வது  தமிழர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.