இலங்கைத் தீவில், அந்நாட்டு அரசினால் அரசியல் சட்டங்களினாலும், ஆயுத வன்முறைகளினாலும் ஈழத் தமிழ் மக்கள் ஒடுக்கி அழிக்கப்படுகின்றனர். எமது சுதந்திர உரிமைக்காக பல்வேறு வழிகளிலும் போராடி வருகிறோம். 2009போருக்குப் பின்னரான, இன்றைய சூழலில் அடிப்படை வாழ்தல்கூட சிறுபான்மை தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
உண்மையான மறுவாழ்வுமற்று, போர் குறித்த பொறுப்புக்கூறலுமற்று சர்வாதிகாரப் போக்கில் நீள்கிறது இலங்கையின் நிலவரம். நிலமற்றும், காணாமல் ஆக்கப்பட்டும், போரில் இழைக்கப்பட்ட குற்றங்களின் நீதி மறுக்கப்பட்டும் வாழ உந்தப்பட்ட மக்களின் உரிமைக்காக ஈழம்நியூஸ் என்ற இந்த தளத்தின் ஊடாக ஜனநாயக குரல் கொடுப்பதே எமது எண்ணம்.
எந்த இனவாத வன்முறை எமை காலம் காலமாக ஒடுக்கி அழித்து வந்ததோ, அந்த வன்முறையால் சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்டும், இன்றும் அந்த வன்முறை சூழலில் பதுங்கியும் ஒடுங்கியும் வாழும் இளைய ஊடக மற்றும் செயற்பாட்டாளர்களின் தன்னலமற்ற கூட்டுருவாக்கமே இந்த இணையத்தளம்.
வாழ்தலுக்கான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரமே இவ் இணையத்தின் இலக்கும் பணியும்.
நிர்வாகக் குழுமம்,
ஈழம்நியூஸ்.