என்னிடம் தோற்று ஓடுவீர்கள் !இதே நாளில் இந்திய இராணுவ தளபதியிடம் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியது !.

0

என்னிடம் தோற்று ஓடுவீர்கள் !இதே நாளில் இந்திய இராணுவ தளபதியிடம் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியது !.

1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு சதி காரணமாக இதே நாளில் லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகள் சயனைட் அருந்தி வீரமரணம் அடைந்த பின்னர்,இந்திய உளவுப்படை தலமை அதிகாரியிடம் தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தை
“நீங்கள் பலரையும் வென்றிருக்கலாம், அடிமைப்படுத்தியிருக்கலாம். ஆனால் என்னிடம் தான் தோற்கப் போகிறீர்கள். ஏனெனில் நான் உயிரின் மீது ஆசை இல்லாதவன். சொத்துச் சுகங்களின் மீது ஆசை இல்லாதவன். எவனுக்கு உயிரின் மீது ஆசை இருக்கிறதோ சொத்துச் சுகங்களின் மீது ஆசை இருக்கிறதோ அவன் மற்றவர்களுக்கு விலை போவான். மற்றவர்களால் விலைக்கு வாங்கப்படுவான்.”

இந்திய தளபதியிடம் கூறியதன்படி இந்தியப் படையைப் பின்னங்கால் பிட்டத்தில் அடிபட தோற்று ஓடச் செய்தவர் தான் தமிழின தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.