எலும்பு தின்ன ரெடி! பிரதமராக மகிந்த; யாழ், கிளியில் ஈபிடிபி வெடி கொளுத்தி கொண்டாட்டம்!

0

பிரதமராக மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதிவேற்றுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் வெடி வெடித்து மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னலையில் பிரதமராக பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ஈபிடிபியினர் வெடி வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சியில் உள்ள ஈபிடிபி அலுவலகத்தில் சந்திரகுமார் ஆதரவாளர்களும் வெடி கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சந்திரகுமாரின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.