ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட குழந்தை ! மகிழ்ச்சியில் திளைத்த இசைப்புயல்

0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இதன் இறுதிக்கட்ட பின்னணி இசை வேலைகளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் துவங்கியுள்ளார்.

இதன் பணியில் ஈடுபட்டிருந்த போது ஹிந்தி பாடகர் அட்னன் சாமியின் ஒரு வயது மகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோ கால் செய்துள்ளர். அதைப்பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் போனை எடுத்து குழந்தையுடன் பேசியுள்ளார்.

இதை தனது டுவிட்டர் பக்கத்தில், பணி சுமை நிறைந்த சூழலில்,குழந்தை மெதினாவின் அழைப்பு மனதை லேசாக்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பாடகர் அட்னன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், போனை லாக் செய்யாமல் தான் வைத்து விட்டு சென்ற நிலையில்,மெதினா செல்போனை எடுத்து தவறுதலாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வீடியோ காலிங் செய்ததாகவும், ரஹ்மான் அந்த குழந்தையுடன் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.