“ஒரு ராத்திரி என்னுடன் படு – அடுத்த படத்தில் பாட வாய்ப்பு தருகிறேன்” ! வைரமுத்துவை அடித்து துவைக்கும் பெண்கள் ! அதிரும் டுவிட்டர்

0

பாடலாசிரியர் வைரமுத்துவின் காம லீலைகள் ஒன்றொன்றாக வெளிவர அடுத்த சம்பவம் ஒன்று பாதிக்கப்பட்டவரால் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாடகர் சின்மயி அவர்களிடம் பகிரப்படவே, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சின்மயி.

இந்த சம்பவத்தின் படி கச்சேரிகளில் பாடிவரும் ஒரு இளம் பாடகி, நண்பர் ஒருவர் செய்த அறிமுகத்தால் திரைப்படத்தில் பாடல் வாய்ப்பு வேண்டி வைரமுத்துவையும் ஒரு திரைப்பட தயாரிப்பளரையும் சென்னையில் உள்ள ஹோட்டலில் சந்தித்ததாகவும், அந்த இரவை அவர்கள் இருவருடனும் கழித்தால், பாடல் வாய்ப்பு அடுத்த படத்திலேயே கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதை கேட்டு அதிர்ந்த அந்த இளம்பெண் ஹோட்டலை விட்டு அன்றிரவு வெளியேறியது மட்டுமின்றி, திரைப்படத்தில் பாட வேண்டும் என்ற ஆசையை குழித்தோண்டி புதைத்துள்ளார்.

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலப்பெண்களில் இவரும் ஒருவர் என தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலப்பெண்கள் தங்கள் கொடுமைகளை வெளி உலகிற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரமுத்து தொடர்பில் அடுத்தடுத்து வெளிவரும் பாலியல் புகார்களினால் தமிழ் சினிமா நடிகர்கள் , ரசிகர்கள் , இசைத்துறை கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள் .

ஒரு பெண் மட்டுமே பாலியல் புகார் தெரிவித்து இருந்தால் அது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வேண்டும் என்று கூறப்பட்டது என்று தட்டி கழித்து விடலாம் ,ஆனால் பெண் பத்திரிகையாளர் , பாடகி சின்மயி , மற்றும் பல பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார்கள் தெரிவித்து வருவதனால் வைரமுத்து உண்மையிலேயே இவ்வாறான ஒரு பெண் பித்தரா ?காம வெறியரா ?என்று ரசிகர்கள் முணுமுணுத்து வருகின்றனர் .

ஒருத்தனுக்கு எழுந்து நிற்கவே தெம்பு இல்லையாம் .இதில ஒன்பது பெண்டாட்டி கேட்டிச்சுதாம் என்று நெட்டிசன்கள் வைரமுத்துவை கலாய்த்து வருகின்றார்கள் .ஒரு மிகப் பெரும் கவிஞன் இவ்வாறு பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பலரையும் ஆச்சரியத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.