கடற்கரையில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி ! அதிர்ச்சி செய்தி ! படங்கள் உள்ளே

0

இலங்கையின் காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனமை தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.