கர்ப்பிணியான விரிவுரையாளர் போதநாயகியின் மரணம் ! கணவர் மீதே சந்தேகம் ! அமைச்சர் அனந்தியிடம் தெரிவிப்பு

0

இலங்கையின்  கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சென்றுள்ளார்.

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்றைய தினம் போதநாயகியின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் அனந்தி சசிதரன், போதநாயகியின் தாயாரிடம் உரையாடியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கரப்பிணியான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும், எதிர்வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அவர் இது தொடர்பான விசாரணைகளை சட்டமா அதிபரின் மூலமாக தீவிரப்படுத்துமாறு கோரி சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கடிதம் ஒன்றினையும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கையளித்துள்ளார்.

  

Leave A Reply

Your email address will not be published.