காட்டிக்கொடுத்த துரோகி ! உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி ! முன்னாள் போராளியின் மனப்பகிர்வு

0

காலம் என்பது சக்கரம் போன்றது அது சுழன்று கொண்டே இருக்கும். அதே போன்றது தான் மனித வாழ்க்கை இதனை விடுதலையை விரும்பாத சில அடிமைத்தமிழர்கள் மறுக்கின்றனர். அவர்களின் புரிதலுக்காக இன்று காலை மீண்டும் நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம் என நினைக்கின்றேன்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதி பகுதியில் இரண்டாவது தடவையாகவும் உடலில் விழுப்புண் அடைந்திருந்தேன். என்னோடு இருந்த குறிப்பிட்ட சில போராளிகளும் விழுப்புண் அடைந்திருந்தார். இறுதி யுத்தத்தின் இறுதி நாளை எட்டியது அதாவது 18.05.2009 மாலை பொழுது எதிரி படைகளும் கைக்கூலிகளும் எம்மை நெருங்க மற்ற சில தோழமைகள் எம்மை அழைத்து கொண்டு எதிரியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தோம் நான் காயப்பட்டிருந்ததால் என்னையும் ஒரு சில போராளிகளையும் அவர்களின் குடும்பத்தோடு வவுனியா செட்டிகுளம் வலையம் 4 (Zone 4) சிங்கள படையினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நான் அன்று எனது குடும்பத்தை இழந்து உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற கவலை ஒரு பக்கம் உடல் வலி ஒருபக்கமாக என்னை வாட்டிக்கொண்டிருந்தது. (எனது குடும்பத்தினர் மாத்தளன் பகுதியில் இறுதியாக வசித்ததால் சிங்கள பேரினவாத படைகளின் திடீர் முற்றுகைக்குள் அகப்பட்டுக்கொணர். இதனால் அவர்களின் இருப்பு அப்போது கேள்விக்குறியாகவே இருந்தது.)

இரண்டு நாட்கள் கழித்து அதாவது 25.05.2009 காலையில் மிகவும் பசியாக இருந்ததால் ( இரண்டு நாட்கள் மனக்கவலையும் உடல் நிலை சரி இல்லாததாலும் பேரிச்சம்பழம் மாத்திரமே உணவாக உட்கொண்டேன்) உணவு குடுக்கும் இடத்திற்கு சென்றேன் அங்கு பாணும் பருப்பு மற்றும் டின்மீன் கறியும் கொடுத்தார்கள் அதை வாங்கு கொண்டு கூடாரம் திரும்பிய வேளை துரோகி ஒருவரால் இராணுவ புலனாய்வு துறையினரிடம் காட்டிக்கொடுக்கப்பட்டேன்

( குறித்த நபர் நான் புதுக்குடியிருப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் நன்கு அறிமுகமானவர் இவர் புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள துவாரகன் தையல் நிலையத்தில் வேலை செய்து வந்தவர். இவரின் சொந்த இடம் தலவாக்கலை நுவெரேலியா மாவட்டம் 1983ஆம் கலவரத்தின்போது கிளிநொச்சி உருத்திரபுரத்தில் தனது குடும்பத்தோடு குடியமர்ந்தார்.

தங்கை ஒருத்தி மற்றும் அம்மா அப்பா ஆகியோர் இவர் குடும்பத்தில் இருந்தனர். 2007ஆம் ஆண்டு திருகோணமலையை சாந்த இடமாகவும், புதுக்குடியிருப்பை தற்காலிக முகவரியாகவும் கொண்ட பெண்ணொருவரை திருமணம் செய்திருந்தார். இறுதி நாட்களின்போதும் இவரின் குடும்பத்தினருக்கு எமது உணவிலிருந்து வழங்கி இருக்கின்றேன்)

என்னை காட்டி கொடுத்த பொது நான் அவரிடம் கூறிய வார்த்தைகள் துரோகமே உன்னை அழிக்கும். பின்னர் கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு அதிகாரியான லெப்டினன் சதுரங்க லக்மால் என்னை விசாரணைக்கு அழைத்தார். விசாரணையின்போது அவர் கூறிய வார்த்தைகள்.

நான் சிங்களவன் எனது மதம் பௌத்தம் ஆனால் நான் உங்களுக்கு எதிரானவனும் அல்ல உங்கள் போராட்டத்திற்கும் எதிரானவன் அல்ல மாறாக நான் தமிழ் மக்களை நேசிக்கின்றேன் அதனால் தான் நான் புலனாய்வு பிரிவை தேர்ந்தெடுத்து கொழும்பிலே புலனாய்வு வேலைகளை முன்னெடுத்தேன். நான் எந்த தமிழனை கொள்ளவும் இல்லை துன்புறுத்தவும் இல்லை ஆனால் நாங்கள் நல்லவர்கள் என்றும் சொல்ல மாட்டேன். உங்கள் போராட்டம் அழிக்கப்பட்டதற்கு காரணம் சிங்களவர்கள் அல்ல உன்னை காட்டி கொடுத்தது போன்று காட்டி கொடுத்த உங்கள் துரோகிகளே காரணம் என்கிறார்.

பின்னர் எனது குடும்பத்தை பற்றி சொன்னேன் அந்த சிங்கள படை அதிகாரி தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு பதிலாக தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து முகாம்களுக்கு என்னை அனுப்பி எனது குடும்பத்தை தேடச்சொன்னார் அவ்வாறு உனது குடும்பம் கிடைக்காமல் விட்டால் இறந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு பாதி சந்தோசத்தை கொடுத்தாலும் பாதி வேதனையையும் வலியையும் கொடுத்தது.

அந்த படை அதிகாரி சொன்ன படியே மக்களோடு பல முகாம்கள் சென்று எனது குடும்பத்தை தேடி அலைந்தேன் இறுதி சபந்தர்ப்பமாக அருணாச்சலம் முகாம் (Zone 3 ) முகாமிற்கு அனுப்பினார்கள் அந்த சந்தர்ப்பத்திலும் 90% நம்பிக்கை இழந்தவனாக எனது குடும்பம் இல்லை என்ற நிலைக்கு வந்தேன் கண்ணில் கண்ணீர் வழிய அருணாச்சலம் முகாமை அடைந்தேன்.

கச்சேரி ஓலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது குறித்த குடும்பத்தினரை மகன் வந்திருக்கின்றார் என்று ஆனால் எந்த பதிலும் இல்லை இறுதியும் அறுதியாக அந்த முகாம் முழுவதும் சுற்றி பார்க்க முகாம் கச்சேரியில் அனுமதி கேட்டேன். என்ன மனநிலையில் இருந்தார்களோ உடனேயே அனுமதி தந்தார்கள்.

முகாம் முழுவதும் சுற்றி விட்டேன் குடும்பத்தையே உறவினர்களையோ காணக்கிடைக்கவில்லை. இறுதியாக 30ஆவது பிரிவை சென்றடைந்தேன் 13ஆம் இலக்க கூடாரத்துக்கு வெளியே எனது சின்ன அக்கா ஒரு மாத குழந்தையை வைத்து தாழ்த்திக்கொண்டு இருந்தார் என்னை கண்டதும் ஒப்பாரி வைக்க தொடங்க எனது குடும்பம் மற்றும் உறவினர்கள் மாறி மாறி கட்டி அனைத்து அழுத்தும் புலம்பியும் அன்போடு வேதனையை வெளிப்படுத்தினார்கள். பிறகு அண்ணாவை விசாரிக்க அவனை பற்றி தெரியாதம்மா. நிச்சயம் அவனும் வருவான் என்று கூறினேன். அதேபோல் 30 நாட்கள் கழித்து கோவில்குளம் தடுப்பு முகாமில் இருப்பதாக தகவல் வந்தது.

(இதேவேளை பின் நாட்களின் கண்டி பல்கலைக்கழகத்தில் படிக்க செல்வதற்கும் குறித்த படை அதிகாரியே உதவி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.) இன்று எனது தோழமை ஒருவர் 4 வருடங்களின்பின் அழைப்பினை ஏற்படுத்தி இருந்தார் நலம் விசாரித்தார். பின்னர் என்னை காட்டி குடுத்த குடும்பத்தின் நிலைமை பற்றி கூறினார். அதனை கேட்கும்போது கோபமாக இருந்தாலும் மனதுக்குள் வேதனை அடைந்தேன்.

தோழமை கூறிய விடையம். புகழ் உன்னை காட்டிக்கொடுத்த அவன் இருக்கிறான் அவன்ர குடும்பம் சின்னாபின்னமாகி போய் கிடக்குது. ஆமிக்காரனோட அவனின்ர தங்கச்சி தொடர்பு வைத்திருந்தவள் கடைசில அவன் விட்டிட்டு போய்ட்டான் இப்ப வயித்தில ஒண்ட சுமந்துகொண்டு வாள்வெட்டியா நாயை போல அலையுது மனிசியும் அவன விட்டிட்டு சோனியோட ஓடி போய்ட்டாள் அது இப்ப தறுதலை மாதிரி திரீது. அவன் செய்த பாவத்துக்கு உது தேவை தான் என்றார் எனது நண்பர். இதைக்கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன். என்னை காட்டி கொடுத்தவரிடமே அன்று கூறிய வார்த்தை இன்று நடந்துள்ளது. இது காலத்தின் தீர்ப்பா அல்லது. தனக்கு தானே செய்து கொண்ட சூனியமா?

எந்தமிழ் உறவுகளிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் முடிந்த அளவு உங்களால் முடிந்த உதவிகளை முன்னாள் போராளிகளுக்கு செய்யுங்கள் அவர்களை பாதுகாப்பது எமது கடமை எக்காலத்திலும் அவர்களை கை விட்டு விடாதீர்கள்.

நன்றி- புகழ் ( முன்னாள் போராளி )

Leave A Reply

Your email address will not be published.