தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சாய் தன்ஷிகா. இவர் நடிப்பில் வெளியான பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்கவை.
நடிப்பைத் தவிர தற்காப்புக் கலைகளும் கற்று வருகிறார். தற்போது நான்கு மொழிகளில் தயாராகும் கிட்னா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சமுத்திரகனி இயக்கி நடிக்கிறார்.
இந்நிலையில் நடன இயக்குநர் சாண்டியின் டான்ஸ் ஸ்டூடியோவின் முதலாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி சாய் தன்ஷிகா கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிலம்பம் சுற்றினார்.
சிலம்பத்தை வேகமாக சுழட்டிய தன்ஷிகாவை அனைவரும் பாராட்டினர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.