ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதின் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் ரோஹித் சர்மா. மேலும் முதல் 5 இடங்களில் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதலிடத்தில் உள்ள கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு தரப்பட்டிருந்த நிலையில் தற்காலிக கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடிய அவர் மொத்தம் 317 ரன்களை குவித்தார். மேலும் வங்கதேச அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்லவும் உதவினார்.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் 2-ஆவது இடத்தில் இருந்த ரோஹித் பின்னுக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்துக்கு வந்துள்ளார். 342 ரன்களை குவித்த ஷிகர் தவன் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ், வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிஸ, ரஹ்மான், ஆப்கனின் ரஷித் கான் ஆகியோரோடு இணைந்து 10 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூல் அவர் 3-ஆவது இடத்துக்கு தகுதி பெற்றுளளார். அணிகள் பட்டியல்: அணிகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து, இந்தியா, நியூஸி, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் முதல் 10 இடங்களில் உள்ளன.