கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா, பாக்கியராஜூம் வந்தார்!! வீடியோ இணைப்பு

0

கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்துத் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு – கிளிநொச்சியில் நடிகர் பாக்கியராஜ் தெரிவிப்பு!

இலங்கை எனக்கு மிகவும் நெருக்கமான நாடு என நடிகர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஒளிப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி பாரதிஸ்டார் விடுதியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இயக்குனர் பாக்கியராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர் குறித்த நிகழ்வில் அரசியல் சார்ந்த எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்பட உலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா – சிறிதரன்

திரைப்பட உலகில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.