முல்லைத்தீவில் வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
12 வயதான குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த சிறுமி மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றைய தினம் நோயாளர்காவு வண்டியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் சிறுமி நோயாளர்காவு வண்டியில் வைத்தே குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தின் பின்னர் தாயும், சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞரொருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.