கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழ் மக்கள்!

மகிந்த ஆட்சிக்காலத்தில்தான் எங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டனர். எனவே மகிந்தவைக் கூட்ட மைப்பு ஆதரிக்கக் கூடாது என்று கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் தொடர்சியாக 663 நாளாக தொடர் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மகிந்த ராஜபக்சவை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமை அமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவினை வழங்கக் கூடாது. அவரின் ஆட்சிக்காலத்திலேயே எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டனர். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக மகிந்த இருந்த போது அவர் மீது விசாரணை களை ஆரம்பிக்காத மைத்திரி அரசு தற்போது தலைமை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அவர் மீது விசாரணைகளை ஆரம்பிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே
அவருக்கான ஆதரவினை வழங்கக்கூடாது. அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவினை
வழங்குவார்கள் ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகம் என்று கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.