கொழும்பு அரசியலில் மாற்றம்; 126பேர் ஆதரவு! மகிழ்ச்சியில் ரணில்!

0

ஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து கொழும்பு அரசியலில் அடுத்து அடுத்து நிகழ்ந்து வரும் அதிரடி அரசியல் மாற்றங்கள் மத்தியில் மற்றுமொரு அரசியல் மாற்றம் ஒன்று இடம்பெற்றிருக்கின்றது.

மஹிந்த மைத்திரி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார் என்று மஹிந்த வாதிகளால் அறிவிக்கப்பட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று முற்பகல் அலரிமாளிகைக்கு நேரடியாக சென்று தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரவி கருணாநாயக்க அலரி மாளிகைக்கு சென்ற போது அங்கு முகாமிட்டுள்ள ஐக்கிய தேசியக்கட்சியினர் பெரும் உற்சாக கோசங்களை எழுப்பி ரவி கருணாநயக்கவை வரவேற்றனர்.

இதற்கு மத்தியில் அலரிமாளிகைக்கு சென்ற ரவி கருணநாயக்க தனது முழுமையான ஆதரவுரணில் விக்ரமசிங்கவிற்கே இருக்கும் என்று உறுதிப்படுத்தியதுடன் மஹிந்த மைத்திரி கூட்டணிஅரங்கேற்றியுள்ள அரசியல் சதியை முறியடிப்பதற்கான போராட்டத்திற்கும் தனது முழுமையானஒத்துழைப்பை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கின்றார்.

மைத்திரி ரணில் இணைந்து ஏற்படுத்தியிருந்த தேசிய அரசாங்கத்தை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியிருந்த அரச தலைவர் மைத்திரிபாலசிறிசேன மஹிந்தவை புதிய பிரதமராக நியமித்திருந்தார்.

இதன்போது 96 உறுப்பினர்களை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலானஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில்தேவையான பெரும்பான்மை பலத்தை நிருபிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில்ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் அவருடன் மேலும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும்தம்முடன் இணைந்து கொள்ளவிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு ஊடகங்களில் செய்திகள்வெளியாகி வந்தன.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் சோடிக்கப்பட்டவை என்பதை ரவி கருணாநாயக்க அலரிமாளிகைக்குச் சென்று ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் தமக்கு இருப்பதாக கூறி வந்தமஹிந்த மைத்திரி கூட்டணிக்கும் பெரும் நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டிருக்னின்றது.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குதெரிவாகியிருந்த ஆனந்த அளுத்கமகே பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின்இணைத்தலைவருமான வேலுச்சாமி ராதாக்கிருஷ்ணன் ஆகியோர் மஹிந்த மைத்திரி கூட்டணிக்கு ஆதரவுதெரிவிக்க முன்வந்துள்ளனர்.

எனினும் மஹிந்த நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதவைினை நிருபிகப்பதற்கு இன்னமும்14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையாக இருக்கின்றது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 120 ற்கும்மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் அறிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.