எதிர்காலத்தில் இசைக்கப்படும் வடக்கு மாகாண சபையின் மாகாணக் கீதத்தினை சிங்கள மொழியிலும் இசைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் மாகாணக் கீதம் உருவாக்கப்பட்டு இறுதி அமர்வான இன்றைய தினம் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், சபையில் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.2013ம் ஆண்டு 1வது மாகாணசபை ஆட்சி அமைந்தபோது கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும் இருக்கவில்லை. இந் நிலையில் வடமாகாணசபை ஆட்சி பொறுப்பேற்றதன் பின் கீதம், செங்கோல், அவை வடிவமைப்பு, ஆசனம் போன்ற அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டன.
இதன்படி மாகாணசபை உறுப்பினர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இன்றைய தினம் சபைக்கு கொண்டுவரப்பட்டு சபையில் கீதம் ஒலிக்க விடப்பட்டதுடன், சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தகதாகும்.இதன்போது மாகாணக் கீதம் சிங்கள மொழியிலும் இசைக்கபடவேண்டும் என உறுப்பினர்கள் சிலரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.