ஐக்கிய தேசியக்கட்சியின் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.எம்.மரிய சீலன் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சற்று முன் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இவர் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுளார். மேலும், அவர் ஏன்? ஏதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விடையம் இது வரை வெளியாக வில்லை.