சுற்றுப்புறச்சூழலினை பாதுகாத்து அழகான இலங்கையினை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிருந்து நேற்றைய தினம் (30.09.2018) ஆரம்பித்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் இன்று (01.10.2018) மதியம் 12.30 மணியளவில் வவுனியா நகரை வந்ததடைந்தது.
இலங்கை ஒர் சிறிய நாடு இதனை மக்கள் ஆகிய நாங்கள் தான் அழகாக வைத்திருக்க வேண்டும் . மரங்களை வெட்டுவதனை நிறுத்த வேண்டும் மேலும் குப்பைகளை சீரான முறையில் அகற்ற வேண்டும் அப்போது தான் நாங்கள் அனைவரும் சுத்தமான சூழலில் நோயின்றி நிம்மதியாக வாழ முடியும் என தெரிவித்து கேகாலை மாவட்டத்தினை சேர்ந்த நாலக்க சேனடிர (வயது-27) என்ற இளைஞன் விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்துத்துறையிலிருந்து நேற்றையதினம் (30.09.2018) காலை 5.00மணிக்கு ஆரம்பமான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியானது நேற்று மாலை மாங்குளத்தினை வந்தடைந்தது.
மாங்குளத்திலிருந்து இன்று (01.10.2018) காலை பயணத்தினை ஆரம்பித்து மதியம் 12.30 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தார். வவுனியாவிலிருந்து ஆரம்பித்த பயணம் மாலை அனுராதபுரத்தினை சென்றடையவுள்ளது.
தொடர்ச்சியாக பத்து நாட்கள் (480-500 கிலோ மீற்றர் தூரம்) பல மாவட்டங்கள் பயணித்து மாத்தறை நோக்கி செல்லவுள்ளார்.