செக்ஸ் தொல்லை காரணமாக பெண் பொலிஸ் அதிகாரி தற்கொலை ! வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்

0

உத்திரபிரதேசத்தில் உயரதிகாரியின் செக்ஸ் தொல்லையால் விரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதால் பெருமளவு சிரமப்படுகிறார்கள்.

உத்திரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி காவல் நிலையத்தில் அர்ச்சனா என்ற பெண் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அர்ச்சனாவிற்கு உயரதிகாரி ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அர்ச்சனா, கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் அர்ச்சனாவிற்கு பாலியல் தொல்லை அளித்த அதிகாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.