சைவத்திற்கு மாறிய விராட் கோலி

0

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது விளையாட்டின் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளாரோ, அதேயளவு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் கொண்டுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமாகிய காலத்தில் விராட் கோலி பெரிய அளவில் உடற்தகுதியின் இருந்தது கிடையாது. அதன்பின் தனது உடற்தகுதியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன் காரணமாக ‘சிக்ஸ் பேக்’ போன்று தனது உடலை மெருகேற்றினார்.

தற்போதைய காலக்கட்டத்தில் உடலை கட்டுக்கோப்போடு வைத்திருப்பதில் விராட் கோலிக்கே முதலிடம். இதற்காக அவர் உணவு கட்டுப்பாட்டில் மிக அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

புரோட்டீன் சத்திற்காக இறைச்சி, முட்டை, பாலில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மேற்கொண்டார். கடந்த நான்கு மாதத்தில் இருந்து திடீரென அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியுள்ளார்.

சைவத்திற்கு மாறிய பிறகு முன்பைவிட வலிமையாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்று ‘‘கோலி கடந்த நான்கு மாதங்களாக சைவத்திற்கு மாறியுள்ளாராம். தற்போது அவரது செரிமான சக்தி அதிகரித்துள்ளதாகவும், முன்பைவிட வலிமையாக இருப்பதாக உணர்வதாகவும், இறைச்சிஇ முட்டை போன்றவற்றை அவர் கைவிட்டது என்பதே தெரியவில்லையாம்’’ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உணவு கட்டுப்பாடு அவரது உடலை மட்டும் சிறப்பாக வைத்திருக்க உதவியதோடு, ஆடுகளத்தில் மனதளவில் சிறப்பாக செயல்படவும் உதவுகிறதாம்.

Leave A Reply

Your email address will not be published.