தகாத பாலுறவு குற்றமல்ல ! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இளம் பெண் தற்கொலை ! மரணத்திற்கு வித்திட்ட சட்டம்

0

தகாத உறவில் இருந்த கணவன், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, கள்ளக்காதல் குற்றமில்லை என கூறியதால், நபரொருவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகாத உறவில் இருந்த கணவன், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, கள்ளக்காதல் குற்றமில்லை என கூறியதால், அவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகாத உறவை குற்றமாக கருதும் சட்டப்பிரிவு 497 மீதான வழக்கு, கடந்த சில தினங்களுக்கு முன், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், தகாத உறவு என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். திருமண உறவில் அது பாதிப்பு ஏற்படுத்தினால், அவர்கள் விவாகரத்து செய்யலாம் என தெரிவித்து, அதை குற்றமற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தத் தீர்ப்பால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிராங்கிளின் (27) என்பவர், புஷ்பலதா (24) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இதனிடையே, புஷ்பலதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பிராங்கிளின் தனது மனைவியிடமிருந்து சற்று விலகியே இருந்துள்ளார்.

இந்த நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பதை அறிந்த புஷ்பலதா, அவரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பிராங்கிளின், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, கள்ளக்காதல் குற்றமில்லை என தெரிவித்தார்.

இதனால் மனமுடைந்த புஷ்பலதா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.