தசர விழா பார்வையாளர்கள் மீது ரயில் மோதியது: உயிரிழப்பு 61 ஆக உயர்வு!

0

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரில் (Amritsar) தசர விழா கொண்டாட்டத்தின் போது நேரிட்ட ரயில் விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.

இத்தகவலை அமிர்தசர் வைத்தியசாலை இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ளது. அத்தோடு படுகாயமடைந்த நிலையில் 71 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோட ஹத்தார்க் பகுதியில், தசரத விழாவின் போது ராவணன் உருவப்பொம்மைக்கு தீயிடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, அதிக உருவமுடைய ராவணன் பொம்மை எரிவதை காண்பதற்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அந்த பகுதியில் ரயில் பாதை உள்ள நிலையில், ஏராளமானோர் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, ஜலந்தரிலிருந்து அமிர்தசரிஸ் நோக்கி வேகமாக சென்ற ரயில், அவர்கள் மீது கண் இமைக்கும் நொடியில் மோதி சென்றதினாலே மேற்படி உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

விழாவின் சத்தம் மற்றும் பொதுமக்களின் ஊச்சல் என்பவற்றால், ரயில் வந்த ஒலி எவருக்கும் கேட்கவில்லை என, முதல்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ளது.

விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள பஞ்சாப் மாநில முதல்வர் அமிர்நிதர்சிங், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்யுர் சிங் சித்துவின் மனைவி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில், குறித்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர் நிகழ்வில் உரையாற்றி கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.