தன்னை தானே திருமணம் செய்து கொண்ட யுவதி ! வினோத திருமணம் !

0

பெற்றோர்களின் திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்க புதிய வழியை கண்டுபிடித்த Oxford  மாணவி.

ஒவ்வொரு பெற்றோருக்கும் அவர்களது மனதில் ஒயாமல் ஓடிகொண்டிருக்கும் அலையில் முக்கியமான ஒன்று தனது மகளுக்கு திருமணம் வயது வந்துவிட்டால் எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்பதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதுமட்டும் இன்றி தனது பிள்ளைகளுக்கு வயது ஆக ஆக பெற்றோரின் திருமண அழுத்தமும் அத்ஹிகமாகி வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த திருமண அழுத்தத்திலிருந்து தப்பிக்கி ஒரே வலி திருமணம் செய்துகொள்வது தான்.

ஆனால், இதற்கும் ஆப்பிரிக்கவை சேர்ந்த Oxford மாணவி புதிய வழியை கண்டறிந்துள்ளார். உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு ஆக்ஸ்ஃபோர்டு பல்கழைக்கழகத்தின் மாணவியான 32 வயதுடைய லுலு ஜெமிமா என்பவரை அவரது பெற்றோர் நீண்ட நாளாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்க இவர் புதிய உத்தியை கண்டறிந்துள்ளார்.

லுலு ஜெமிமா கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், உகாண்டாவில் நடைபெற்ற என திருமணத்திற்கு எனது பெற்றோர்கள் வரவில்லை. கோ ஃபண்ட் மீ என்ற பக்கத்தை தனது படிப்பிற்கான கட்டணத்தை சேமிக்க வைத்துள்ளார். அதில் தனது திருமண குறித்த முடிவை பதிவிட்டுள்ளார்.

எனது தந்தை எனக்கு 16 வயது ஆனபோதே என்னுடைய திருமணத்தில் பேச வேண்டிய உரைய தயார் செய்து விட்டார். சமீபகாலமாக என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் என்னை நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவரை 32 வது திருமணம் செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லுலுவின் திருமணத்திற்கான மொத்த செலவு $2.62  மட்டுமே. அதுவும் அவர் பயணத்திற்கு ஆன செலவே. திருமண உடையை பிறந்த நாள் பரிசாக லுலுவிற்கு அவரது தோழி கொடுத்துள்ளார். லுலுவின் சகோதரர் திருமண கேக்கை தயார் செய்து கொடுத்துள்ளார். மேலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் தங்களது பில்லை தாங்களே கொடுத்து விட்டனர் எனவுன் தெரிவித்தார்.

உலகை சுற்றி பல விசித்திரமான வகையில் திருமணம் செய்துகொண்டு வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் ஒரு இளம் ஜோடி தங்களது திருமணத்தை நிவாணமாக செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது..!

Leave A Reply

Your email address will not be published.