தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாணவி சாதனை !

0

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா அவர்கள் 2018 ம் ஆண்டு இடம்பெற்ற தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளார் .

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இந்த சாதனையை படைத்துள்ளார் .இம்மாணவி பௌதீக வளங்கள் குறைந்த பாடசாலையில் படித்து வருகின்றார் . தந்தையைப் பிரிந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் மாணவி பாடசாலை அதிபருடைய ஊக்கம் , தரம் 5 வகுப்பாசிரியர் துவாரகனின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுள்ளார் .

போரினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பாடசாலையில் கல்வி பயின்று தனியார் வகுப்புக்கு செல்லாது கடின பயிற்சியின் மூலம் சாதித்த மாணவிக்கு ஈழம் நியூஸ் இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது ..

Leave A Reply

Your email address will not be published.