தலைவர் பிரபாகரனின் தாயாரை இறுதி வரை பராமரித்த தேசத்தின் மகத்தான வைத்தியர் மரணம் !

0

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் ஓய்வுபெற்ற மாவட்ட வைத்திய அதிகாரி இன்று ஞாயிறு காலை காலமானார்.தமிழீழ தேசியத்தலைவரது தாயாரினை இவரது இறுதி வரை பராமரித்து வந்த வைத்திய அதிகாரி மயிலேறும்பெருமாள் பராமரித்து மருத்துவ சேவைகளையும் வழங்கியிமிருந்தார்.

அமரர் வேலுப்பிள்ளை இலங்கை இராணுவ தடுப்பு முகாமில் மரணமடைந்திருந்த நிலையில் அநாதரவாகியிருந்த பார்வதியம்மாளை அழைத்து வந்து தனது வைத்தியசாலையில் மரணம் வரை மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் பராமரித்து வந்தார்.

சிறந்த வைத்திய நிபுணரான, அவர் இலங்கை இந்திய இராணுவ காலப்பகுதியில் வடமராட்சி பிரதேச மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய சேவையாளராவார். தமிழீழ தேசிய தலைவரின் நன்மதிப்பினை பெறறிருந்த மருத்துவர் மயிலேறும்பெருமாள் கனகசுந்தரம் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை நேசித்து ஆத்மாக்களில் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.