தியாகுவின் பாலியல் வக்கிரங்களுக்கு சுப.வீதான் சாட்சி! சின்மயியை அடுத்து இறங்கி அடிக்கும் கவிஞர் தாமரை!!

0

இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன்’ ‘தப்பு நடந்து 14 வருஷம் ஆச்சா’

என்று திமுகவின் மேல் இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாகப் போட்ட ட்விட்டால் வலைதள வட்டாரங்களில் நேற்றுமுதல் அறுத்துக் கிழித்து தொங்கவிடப்பட்டுக்கொண்டிருக்கிறார் பேராசிரியரும் திமுக விசுவாசியுமான சுப.வீரபாண்டியன்.

அவர்களின் தொடர்ச்சியாக பேரசிரியர் மீது பெரும் தாக்குதல் நடத்தியிருக்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் ,’ இன்னுமா இந்த சுப.வீயையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். சுப.வீ.யும் தியாகுவும் தமிழ் தமிழர் இயக்கத்தில் பொதுச்செயலாளர், தலைவர் என ஒன்றாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார் சுப.வீதான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இவர்கள் இரண்டு பேருக்கும்…

இயக்கத்தின் பேரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும் சாட்சி’ என்று குமுறிக்கொட்டியிருக்கிறார் தாமரை.

வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்கியதை ஒட்டி, அடுத்து யாருக்கும் பதில்கள் கனத்த மவுனத்தோடு அலைகிறார் சுபவீ.

பாடலாசிரியர் தாமரையின் கணவர் தியாகு, இளம் பொண்ணுடன் தொடர்பு வைத்தமை காரணமாக தாமரையைப் பிரிந்ததும் தாமரை வீதியில் இறங்கி போராட்டம் செய்ததும் சில வருடங்களின் முன்னர் இடம்பெற்ற நிகழ்வு.

தியாகு – தாமரை பிரிவுக்கு காரணமான சம்பவம் தொடர்பான வீடியோ

Leave A Reply

Your email address will not be published.