தேன்நிலவு சென்றபோது காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டுத்தள்ள திட்டமிட்ட மனைவி !

0

காதலனுடன் சேர்ந்து கணவரை தேனிலவு சென்றபோதே கொலை செய்த முயற்சி செய்த மனைவியையும் காதலனையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்துகுடியை சேர்ந்த அனிதாவுக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன் அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னரே அனிதா, தனது பள்ளித்தோழர் ஜெகன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததோடு உடனே அவருக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டனர்.

கதிரவனை வேண்டாவெறுப்புடன் திருமணம் செய்து கொண்ட அனிதா, கோத்தகிரிக்கு தேனிலவு சென்றபோதே கணவர் கதிரவனை கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் அவரது திட்டம் அங்கு கைகூடவில்லை.

இதனையடுத்து சென்னைக்கு கணவருடன் குடிவந்த அனிதா, சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். அப்போது தனது காதலர் ஜெகனுக்கு தகவல் கொடுத்த அனிதா, கணவர் கதிரவனை காதலனுடன் சேர்த்து கொலை செய்ய முயற்சித்து அதன்பின்னர் நகை கொள்ளை போனதாக நாடகமாடினார். ஆனால் போலீஸ் விசாரணையில் அனிதா உண்மையை கூறிவிட்டதால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்த கதிரவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.