தேர்தல் கடமையில் ஈடுபட்டவருக்கு தலையில் துப்பாக்கி வைத்த ஈபிடிபி தவநாதன்! இவர்கள் ஒழியும்நாள்தான் தீபாவளி!!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு அரசு செயலிழக்கும் நாளே வட பகுதியில் தீபாவளி என்று ஈபிடிபி துணை இராணுவக் குழு உறுப்பினர் தவநாதன் கூறியுள்ளார். ஆனால் ஈபிடிபியினர் முற்றாக அகற்றப்படும் நாளே தீபாவளி என வட பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஈபிடிபி மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த அரசுடன் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது. மக்களை மிரட்டி அரசியல் செய்து வந்தது. சாராயத்தையும் சலுகைகளையும் மக்களுக்கு கொடுத்து மக்களை ஏமாற்றி பிழைத்ததுடன் கள்ள ஓட்டுக்களை போட்டு மக்கள் சபைகளில் உறுப்பினராக இருந்தது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவர் மக்களால் தூக்கி எறியப்பட்டனர். இதில் சந்திரகுமார், உதயன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். தற்போது வடக்கு முதலமைச்சர்மீது சேறுபூசி அடுத்த மாகாண சபையில் வெல்லும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு முதல்வர் தலைமையிலான மாகாண சபை முடிவு பெறும் நாள் தனக்கு தீபாவளி என கூறியுள்ள தவநாதன், கிளிநொச்சியில் 2011ஆம் ஆண்டு பிரதேச சபைத் தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஒருவருக்கு துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியவர். இவர்களைப் போன்றவர்கள் ஒழியும் நாட்கள் தீபாவளிதான் என மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் இவர் எதிர்காலத்தில் ஒரு கிராம சங்க தலைவராக கூட வர மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதைப்போல சந்திரகுமாரையும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த நிலையில் டக்ளஸூம் மக்களால் தூக்கி எறியப்படும் நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தீபாவளி என்றும் மக்கள் கூறுகின்றனர்.