நல்லாட்சியில் சிங்களக்குயேற்றம் இல்லை என்ற சுமந்திரன் இப்போது சொல்வது என்ன?

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்காக காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகிறது!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகளை பலவந்தமாக கைப்பற்றி சிங்கள குடும்பங்களை குடியேற்ற போவதில்லை என அரசாங்கம் கூறிய போதிலும் மகாவலி L வலயம் ஊடாக தொடர்ந்தும் காணிகள் கைப்பற்றப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களிடம் சுமந்திரன் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பு கடிதத்தை நாளைய தினம் நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளைய தினம் மாலை வடக்கு,கிழக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அப்போது இந்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்து, அது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி L வலயத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் தெற்கில் இருந்து சிங்களவர்களை அழைத்து வந்து குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்ட போது, அப்படி எதுவும் நடக்காது ஜனாதிபதி வாக்குறுதியளித்தார். எனினும் மீண்டும் அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை அவர்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுவது மட்டுமல்லாது, முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.