நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம குழு ! 21 வயதான இளம் பெண், பெற்றோர் மீது தாக்குதல் ! நடந்தது என்ன ?

0

வீடொன்றுக்கு நேற்றிரவு வந்த குழுவொன்று அங்கிருந்த தாய், தந்தை மற்றும் அவர்களது 21 வயது மகளை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இலங்கையின் செவனகல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இத் தாக்குதலில் காயமடைந்த அவர்கள் மூவரும் பிரதேசவாசிகளால் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட நபர்களுள் ஒருவர் டி56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குலுக்கு உள்ளான நபர்களின் காணியை பலாக்காரமான முறையில் கைப்பற்றுவதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காணி தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிய தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கக் கூடும் என காவற்துறை சந்தேகிக்கின்றது.

சம்பவம் தொடர்பில் செவனகல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.