சந்திரகுமாரினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு நாள் இன்று தமிழர் தாயகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. கொலை கலாச்சாரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று பேட்டி கொடுக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியினரால் கொலை செய்யப்பட்டார் ஊடக போராளி நிமலராஜன்.
நிமலராஜனை கொலை செய்தது வேறு யாரும் இல்லை. அந்தக் கட்சியினுடைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் என்பவர் தான். கருத்து சுதந்திரம் அடக்கப்படுவதுக்கு எதிராக பல வண்ண கட்டுரை எழுதும் நம்ம இலக்கியவாதிகள் எல்லோரும் மௌனமாக கடந்து போகும் நாள் இது.
ரஜினி திறனகம போன்றவர்களை மட்டுமே தெரிஞ்சு வைச்சிருக்கிற வினோத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நிமலராஜனை தெரியாதது போலவும் அவரை கொலை செய்தது சந்திரகுமார் என்பதை தெரியாததுபோலவும் இருப்பார்கள். அத்துடன் சந்திரகுமார் அற்புதன் என்ற ஈபிடிபி பத்திரிகையாளரையும் கொலை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி – பேஸ்புக்