நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா என கேட்ட நடிகை ! பதில் கருத்து கூறாமல் மௌனம் காக்கும் நடிகர் அருண் விஜய் !

0

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் அவரது தந்தை விஜயகுமாருக்கும் வீட்டு விவகாரம் தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது.

தனது அம்மாவுக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் தான் வசிப்பதற்கு உரிமை இருக்கிறது என வனிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், ஊடகங்களை சந்தித்து தனது தந்தை குறித்தும், தனது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும், தனது அண்ணன் அருண் விஜய் ஒரு ஆம்பிளையா? அவரின் பேச்சை கேட்டுக்கொண்டுதான் எனது அப்பா இவ்வாறு என்னை வெளியேற்றியுள்ளார்.

எனது அண்ணன் என்னை அடித்தார் என்று பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். ஆனால் இதுகுறித்து விஜயகுமார் குடும்பம் பதில் கூறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அருண் விஜய்யிடம், வனிதா குறித்து கேள்விகேட்கப்பட்டது, அதற்கு அவர், உண்மையா இருந்தா அதுக்கு விளக்கம் கொடுக்கலாம், பதில் சொல்லலாம் . தெரிஞ்சே சொல்லப்படும் பொய்களுக்கு பதில் கொடுத்து அதை பெருசாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.