பாலியல் தொல்லை கொடுத்த 48 ஊழியர்கள் பணிநீக்கம் ! கூகிள் அதிரடி

0

கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் சுமார் 48 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக  கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பத்திரிக்கை துறை என்று இல்லை. சினிமா துறை என்று இல்லை. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும்  பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் மாற்று கருத்து இல்லை. இதை மாற்றவே தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.

#MeToo என்ற ஹாஸ் டாக் உருவாக்கி, சமூக வலைதளத்தின் மூலமாக பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். இதில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான முன்னணி நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் ஒன்று, ஆண்ட்ராய்டின் தந்தை என அறியப்படும் ஆண்டி ரூபினுக்கு, கடந்த 2014ம் ஆண்டில் 90 மில்லயன் டாலர்களை கொடுத்து பாராட்டி, வெளியே அனுப்பிய கூகுள் நிறுவனம், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைத்ததாக செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரத்துக்கு பதில் அளிக்கும் விதமாக கூகுள் நிறுவன CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார் அதில்;

கடந்த 2 ஆண்டில், பாலியல் தொல்லை குற்றச்சாட்டில் 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர் கூகுள் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. பாலியல் தொல்லைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.