பெண்களின் சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்கின்றது ! பிரபல நடிகை பளீர்

0

சினிமா துறையில் நடக்கும் பாலியல் சம்பவங்கள் பற்றி கடந்த சில நாட்களாக பெண்கள் தைரியமாக பேசி வருகின்றனர். தங்களுக்கு நடந்த பாலியல் சம்பங்களுக்கு டுவிட்டரில் மீடூ என்ற ஹேஷ்டேக் வார்த்தை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய பாலிவுட்டைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை ஷில்பா ஷிண்டே, ‘’மீ டூ பிரசாரம் ஒரு குப்பை. அந்த நேரத்தை நீங்கள் எளிதாக கடந்து வர வேண்டும். அப்போது மட்டுமே அதைப்பற்றி பேச வேண்டும். நீங்கள் தாமதமாக குரல் கொடுத்தால் உங்களை யாரும் கவனிக்க மாட்டார்கள். எனக்கும் இது போன்ற ஒரு அனுபவம் நடந்துள்ளது.

மேலும் எல்லா இடங்களிலும் இந்த விஷயங்கள் நடக்கின்றன. சினிமா துறை மோசமானதல்ல நல்ல துறை தான். இந்தத்துறையின் பெயரை ஏன் கெடுக்கிறார்கள் என தெரியவில்லை. இந்தத்துறையில் கட்டாயப்படுத்தி யாரும் பலாத்காரம் செய்யப்படுவதில்லை.

எல்லாம் பரஸ்பர புரிதலில் நடக்கும் கொடுக்கல் வாங்கல் முறைதான். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அதை தவிர்த்துவிடுங்கள்’’ என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.