பெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் ! உண்மைச் சம்பவம்

0

தாயுமான தலைவன் .உண்மைச் சம்பவம்

மூன்று பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பத்தில் ( முதல் ஆண், இரண்டா வது பெண்,முன்றமாவது ஆண்)
முதலிரண்டு பிள்ளைகளும் சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக, அவர்களால் தமிழ்மக்கள் படும் துயரங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தலைவரின் வழிகாட்டுதலை உளமார ஏற்று விடுதலை இயக்கத்தில் இணைந்து நாட்டுக்காக களமாடி வீரச்சாவு அடைந்துவிட்ட நிலையில்…

மூன்றாவது பிள்ளையும் தானும் இயக்கத்துக்கு போவேன் எண்ட அக்கா, அண்ணனின்ர சாவுக்கும் எங்கட சனத்தின்ர விடிவுக்காக நானும் இயக்கத்தில் இணைந்து நாட்டுக்காக போராடுவேன் என்று கூற அப்பிள்ளையை பெற்ற பெற்றோர்களோ பதறியபடி ஏற்கனவே ரெண்டை கொடுத்திட்டன் இப்ப நீயும் எங்களை விட்டிட்டு போக போறியோ அப்டியானால் எங்கள் ரெண்டு பேரையும் கொன்று புதைச்சிட்டு பிறகு போ இயக்கத்துக்கு என்று ஆத்திரமும் அழுகையுமாய் கூறுகின்றனர். ஆனால் அப்பெடியோ இயக்கத்தில் இணைந்தே தீருவேன் அதுவும் கரும்புலியாக போவேன் என்று பிடிவாதமாக நிற்க அப்பெடியனின் தந்தை அப்பகுதி இயக்க பொறுப்பாளரை சந்தித்து கண்ணீருடன் விடயத்தை சொல்ல அப்பொறுப்பாளர் மூலமாக விடயம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப் படுகின்றது.பிரச்சினையை முழுமையாக விளக்குவதற்கு முன்னதாகவே தலைவரிடமிருந்து வந்து விழுந்தது பதில்.

“அவர் இயக்கத்தில் சேர அனுமதியில்லை தாய் தந்தையரை கவனிக்கும் பொறுப்பு அப்பெடியனுடையது”என்று.

நாட்டுக்காக வீட்டுக்குகொரு பிள்ளையை தாங்கோ என்றுதான் தலைவர் கேட்டார் ஆனால் நாங்களோ அந்தகணக்கையும்மீறி இரண்டு பிள்ளைகளை கொடுத்திட்டம். கடைக்குட்டியும் தங்களை விட்டிட்டு போயிடுவானே என்ற பெற்றோரின் தவிப்பை உணர்ந்த தாயுள்ளத்திற்கு சர்வதேசம் சூட்டியிருக்கும் பெயர் #தீவீரவாதி.

#புலிகளின்_தாகம்_தமிழீழ_தாயகம்.

Leave A Reply

Your email address will not be published.