போதையில் போலீஸ் காரருடன் ரெஸ்ட்லிங் செய்த வழக்கறிஞர் !

0

கர்நாடகாவில் போதையில் வக்கீல் ஒருவர் போலீஸ்காரரிடம் குத்திச்சண்டை வீரர் போல் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்பவரின் வாகனத்தை நிறுத்திய போலீஸார், அவர் குடித்துள்ளாரா என்பதை சோதனை செய்ய அவரின் வாயை ஊத சொன்னார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் நான் ஒரு வக்கீல், என்னையே இப்படி செய்ய சொல்றியா என கூறியவாறே போலீஸாரை குத்துச் சண்டை வீரர் போல் கடுமையாக தாக்க தொடங்கினார். இதில் பணியில் இருந்த காவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

இதனை அருகிலிருந்தவர்கள் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். இதையடுத்து போலீஸார் ருத்ரப்பாவை கைது செய்து, அவர் குடிபோதையில் இருந்தாரா என பரிதோதனை செய்துள்ளனர். மேலும் பணியில் இருந்த போலீஸை பணிசெய்ய விடாமல் தடுத்து அவரை தாக்கியதற்கு அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.