மகிந்தவுக்கு காட்டிக் கொடுத்துவிட்டு இப்போது போராளி வேடம் போடும் ஈபிடிபி சந்திரகுமார்!

0

கொடுங்கோலனான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்துவிட்டு தற்போது, ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் போராளி வேடம் போடுவது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தனது அடியாட்களை சந்தித்த சந்திரகுமார் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக பேஸ்புக்கில் எழுதுமாறு சொல்லியுள்ளனர்.

இவ்வாறு எழுதுவதன் மூலமே அடுத்த தேர்தலில் தாம் ஆசனங்களைப் பெற முடியும் என்றும் சொல்லியுள்ளனர். ஆனால் டக்ளஸ் தேவானந்தாவும் சந்திரகுமாரும் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்துள்ளனர். அத்துடன் இராணுவத்துடன் இணைந்து பல பொதுமக்களையும் அப்பாவி இளைஞர்களையும் கொலை செய்துள்ளனர். இவர்களால் சிறையில் உள்ளவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் அரசியல் கைதிகளுக்காகவும் குரல் கொடுப்பது வேடிக்கையானது. அத்துடன் தனது அடியாட்களை வைத்து தமிழ் தேசிய உணர்வுடன் செயற்படும் மக்கள் பிரதிநிதிகளை தாக்கும் செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். மகிந்த காலத்தில் சிங்கள அரசுக்கு காட்டிக் கொடுத்த இவர்கள், தற்போது மக்களின் மீது அக்கறையுடன் செயற்படும் மக்கள் பிரதிநிதியை காட்டிக் கொடுப்பதாக சொல்கின்றனர்.

இதேவேளை, டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் மகிந்த ஆட்சிக் காலத்தில் போரில் மக்கள் கொல்லப்படவில்லை, எவரும் காணாமல் ஆக்கப்படவில்லை. சர்வதேச விசாரணை வேண்டாம் என கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தினர். அத்துடன் பொதுமக்களுக்கு கல் எறிந்து அவர்களை தாக்கினர். இப்போது தமிழ் மக்களின் உரிமை, சமநீதி, அமைதி, தமிழ் தேசியம் பேசுகின்றனர்.

அத்துடன் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச கட்சி தொடங்கியபோது டக்ளஸ் மற்றும் சந்திரகுமார் கூட்டாகச் சென்று மகிந்தவை வாழ்த்திவிட்டு வந்தனர். எதிர்காலத்தில் மகிந்த ஆட்சியை கைப்பற்றினால் தாம் வந்து இணைந்து ஆதரவு தருவதாகவும் மகிந்தவின் கால்களை நக்கி வந்துள்ளனர். இந்த இரண்டு நாய்களும் மகிந்தவின் எலும்புக் கூட்டுக்காக காத்திருக்க, இவர்களை சுற்றி பல நாய்கள் இவர்களின் சாராயத்திற்கும் எலும்புக்கும் நக்கியபடியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.