மலைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு விளையாடிய காஜல் அகர்வால் ! படம், வீடியோ உள்ளே

0

நடிகை காஜல் அகர்வால், மலைப்பாம்பை ஒன்றை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் தான் தமிழில் வெளியான இவரது கடைசி படமாக இருந்தது. இதையடுத்து, தற்போது தமிழில் பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் பிஸியாக உள்ளார். அதோடு, இயக்குனர் தேஜா இயக்கத்தில் ஸ்ரீநிவாஸ் பெல்லம்கொண்டா உடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் சூட்டப்படவில்லை.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மலைப்பாம்பு ஒன்றை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு அதனுடைய அனுபவத்தை கூறும் விதமாக அந்த வீடியோ அமைந்துள்ளது. அந்த வீடியோவில் காஜல் கூறியிருப்பதாவது: பாம்பு நகரும் போது தனது ஒவ்வொரு தசையும் எனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.