மஹாவலி எல் திட்டத்தில் முறைகேடுகள்! ஒப்புக்கொண்ட மைத்திரி! நிறுத்தவும் முடிவு

0

வடக்கு மஹாவலி திட்டம் – உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மஹாவலி எல் வலயத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாலை,பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்திலேயே மேற்படி உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

கடந்தமுறை நடைபெற்ற செயலணிக் கூட்டத்தில் மஹாவலி தொடர்பில் எதுவித மாற்றுக் குடியேற்றங்களும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஓகஸ்டில் வழங்கப்பட்ட மீன்பிடி அனுமதிகள் மற்றும் குடியேற்றம் சம்பந்தமான ஆதாரங்களைச் சமர்ப்பித்த சுமந்திரன், இவற்றை உடனடியாகத் தடைசெய்ய வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதன்போது, மஹாவலி எல் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி, வடக்கில் மேற்கொள்ளப்படும் மஹாவலித் திட்டங்களை உடனடியாக நிறுத்தும்படி, திட்டப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார் என சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.