முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வடக்கு கிழக்கில் மீண்டும் விடுதலைப்புலிகளின் கைகள் ஓங்க வேண்டும் என்று விஜயகலா கூறிய கருத்து தென்னிலங்கையில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது .இதன் காரணமாக விஜயகலா மகேஸ்வரன் தனது அமைச்சு பதிவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டார் .இன்று காலை கைது செய்யப்பட்ட விஜயகலா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் .