யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை ஒழிக்க பாரிய வேட்டை ஆரம்பம் ! அடங்குமா ஆவா குழு ?

0

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுக்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் ஆவாக் குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்றைய தினம்(09) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை உள்ளடக்கியதாக கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இந்தச் சிறப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது ஆவாக் குழுவினரின் மறைவிடங்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 21 வீடுகளில் தேடுதல்கள் நடாத்தப்பட்டன.

இதன் போது ஆவாக் குழுவினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையில் 300 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் 200 காவல்துறையினரும், முல்லைத்தீவிலிருந்து அழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும், கிளிநொச்சியிலிருந்து வரவழைக்கப்பட்ட 50 காவல்துறையினரும் இந்தத் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேவேளை, காவல்துறையினர் தவிர புலனாய்வுப் பிரிவினரும் தேடுதல்களில் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.