யாழ்ப்பாணத்தில் ஆவா குழு ரவுடிகள் அட்டகாசம்! ஒருவர் பலி ! அச்சத்தில் மக்கள்

0

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் வாள்வெட்டுக்குழு நள்ளிரவு வேளையில் கொடூர தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஒரு வீட்டுக்குள் கணவன்-மனைவி இருவர் மீது நடத்திய தாக்குதலில் ம.ம.சித்திரவடிவேல் 56 வயது அவரது மனைவி சி.ஜெயந்தி 43 வயது ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு 66 வயதுடைய ஒ.ஜெயசிறி என்பவரை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவரின் மனைவி 54 வயதுடை ஜெ.நிர்மலாதேவி என்பவரையும் படுகாயமடைய செய்துள்ளனர்.

அதுமட்டுமன்றி பல வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்தவர்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.