யாழ்ப்பாணத்தில் யுவதி கடத்தல் ! சாரதி கைது.. நடந்தது என்ன ?முழு விபரம் இணைப்பு

0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முச்சக்கர வண்டியின் சாரதியை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைதான சாரதி அளித்த வாக்குமூலத்தை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

நீர்வேலியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளர் அரியாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு தனது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த பெண்ணை தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, மனைவி குழப்பம் விளைவித்ததால் நாவற்குழியில் வைத்து பெண்ணின் கைகளைத் துணியால் கட்டி அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனை அவதானித்த நபர் தவறாக விளங்கிக் கொண்டு முச்சக்கர வண்டியைப் பின் தொடர்ந்துள்ளார்.

இந்தத் தகவலை விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.