யாழ்ப்பாணம் அமைதியில் எனச் சொல்லி அரைநாளில் வாள்வெட்டு! இரவு வேளையில் வீடுகள் மீது தாக்குதல் – மர்மநபர்கள் அட்டகாசம்
யாழ்ப்பாணத்தில் மர்மநபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பிரதேசத்தில் வீடு ஒன்றுக்குள் நேற்றிரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மர்மநபர்களின் தாக்குதல் காரணமாக வீடுகள் பாரிய சேதம் அடைந்துள்ள போதிலும், எந்வொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.