யாழ்ப்பாணம் சர்வதேச விருதுகள் நிகழ்வில் விருது பெற்ற ஈழத்து சிறந்த இயக்குனர் நடிகர் மதி சுதா ! படங்கள் உள்ளே

0

ஈழத்தின் குறும்பட இயக்குனர் மற்றும் நடிகர் இன் எழுத்து இயக்கத்தில் உருவான ” வெடி மணியமும் இடியன் துவக்கும்” எனும் குறும்படம் இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விருதுகள் நிகழ்வில் விருது பெற்றுள்ளது.

இந்த விருது குறித்து மதி சுதா கருத்து தெரிவிக்கையில் , “இந்தப்படைப்புக்காக என்னோடு உழைத்த என் அன்புச் சகோதரர்களுக்கும், எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் என் சினிமாவை ரசிக்கும் அன்பு உறவுகளுக்கும் இன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார் .

மேலும் , இந்தப்படத்துக்கு தயாரிப்புக்காக தேடி அலைந்த போது அணுகியவரில் ஒருவரான ஐங்கரண்ணாவுக்கு ஒரு வாக்குக் கொடுத்திருந்தேன். நம்பித் தயாரியுங்கள் அண்ணா ஒரு வருடத்துக்குள் விருது கிடைக்காட்டில் அவ்வளவு பணத்தையும் திருப்பியளிப்பேன் என்ற வார்த்தையை காப்பாற்றி விட்டேன் என்ற மகிழ்வோடு நான்.

என் வார்த்தையை விட என் கதையை நம்பிய ஐங்கரண்ணாவுக்கு மிக முக்கிய நன்றிகள் என்று தெரிவித்துள்ளார் .

ஈழத்து சினிமாவில் தரமான குறும்படங்களை இயக்கி நடித்து பல விருதுகளை பெற்று சாதித்து வரும் இளம் இயக்குனர் மதி சுதா அவர்களுக்கு ஈழம் நியூஸ் இணைய குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.